1
அமெரிக்காவில் குரங்கம்மை தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து வருகிறது. தேவையைச் சமாளிக்கப் போதுமான தடுப்புமருந்து இல்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கு இதுவரை சுமார் 1,400 பேருக்குக் குரங்கம்மை ஏற்பட்டுள்ளது. அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம் அமெரிக்க அரசாங்க இணையத்தளம் தடுப்பூசி கேட்டு வந்த ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களைச் சமாளிக்க முடியாமல் தடுமாறியது.