விஜய், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்த ‘துப்பாக்கி’ படத்தின் இந்தி ரீமேக்காக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘ஹாலிடே’ படம் மூன்று நாட்களுக்கு முன் உலகம் முழுவதும் வெளியானது.
அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடித்துள்ள படத்திற்கு முதல் நாளே அமோக வரவேற்பு இருந்ததாம். முதல் நாளில் மட்டும் சுமார் 12 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் முதல் நாளில் அதிக வசூல் புரிந்த படங்களில் ‘ஹாலிடே’ நான்காம் இடத்தைப் பிடித்துள்ளதாம். படத்தைப் பற்றிய விமர்சனங்களும் படத்திற்கு ஆதரவாகவே வருவதால், இந்த படமும் இந்திப் பட வரலாற்றில் சாதனை புரியும் என பேசிக் கொள்கிறார்கள்.
ஏ.ஆர். முருகதாஸ் சில வருட இடைவெளிக்குப் பிறகுதான் மீண்டும் ஒரு இந்திப் படத்தை இயக்கினார். இருந்தாலும் இந்திப் பட ரசிகர்களின் எண்ணத்திற்கேற்ப படத்தைக் கொடுத்திருப்பதாகப் பாராட்டுகிறார்கள்