மறந்தேன் மெய்மறந்தேன், இன்பா, கத்திக்கப்பல், இளம்புயல் போன்ற படங்களில் நடித்திருப்பவர் கல்யாணி. கடந்த ஆண்டு ரோஹித் என்பவரை மணந்தார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று ரோஹித்திடம் கல்யாணி கூறி இருந்தார். அதை அவரும் ஏற்றுக்கொண்டார். அதன்பிறகே இவர்களது திருமணம் நடந்தது.
இருவரும் பெங்களூரில் வசித்து வந்தனர். இந்நிலையில் தாயுமானவன் என்ற படத்தில் நடிக்க கல்யாணிக்கு வாய்ப்பு வந்தது. இதை கணவரிடம் தெரிவித்தபோது அவர் நடிக்க பச்சை கொடி காட்டிவிட்டாராம். இதையடுத்து படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதுபற்றி கல்யாணி கூறும்போது,நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்