ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவ தயார் நிலையில், இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தின் போது தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் பயிற்சி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரம் சில தினங்களுக்கு முன் அதிநவீன கண்ணி வெடிகளை பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவிற்குள் அனுப்பி இருப்பதை உளவுத்துறை கண்டுப்பிடித்துள்ளதாகவும், அந்த கண்ணி வெடிகள் ஒவ்வொன்றும் 3 கிலோ எடை கொண்டது எனவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.