சென்னை: சென்னையில் அடையாறு, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், மறைமலைநகர், தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் மழை கொட்டுகிறது. சென்னையை இருள் சூழ்ந்ததால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி செல்கின்றன. சென்னையை கருமேகங்கள் சூழந்ததால் மாலை நேரமே இரவுபோல் இருள் கவிந்தது.
சென்னையை பொறுத்தவரை இன்று மாலை 4 மணிக்கு மேலாக கருமேகம் என்பது சூழ்ந்து காணப்பட்டது. வங்கக்கடலின் வடக்கு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உட்பட வடமாவட்டங்களில் மழையை ஏற்படுத்தும் என்று வானிலை மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் கடந்த 20 நிமிடங்களுக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. சாலைகளின் ஓரங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், திரிசூலம், ஆலந்தூர், பம்மல், அனகாபுத்தூரில் மழை கொட்டுகிறது. செம்பாக்கம், சேலையூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.