இதனையொட்டி இன்று (திங்கட்கிழமை) டெல்லி, மும்பை, அயோத்தி, மதுரா உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மையில் கண்ணன் பிறந்த ஜன்மபூமியான மதுராவில் கண்ணன் பிறந்த இடத்தில் மசூதி ஒன்று கட்டப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி இருந்தனர். இதனால் குறித்த பகுதிகளில் பதற்றம் நிலவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.