புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. வரும் ஜனவரி 5ம் தேதி பஞ்சாப்பில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பாஜ தகவல் தெரிவித்துள்ளது.
பெரோஷ்பூரில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பாஜவின் தேர்தல் பிரசாரத்தை மோடி தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது. இதில், புதிய கட்சி தொடங்கி பாஜவுடன் சேர்ந்துள்ள அமரீந்தர்சிங்கும் பங்கேற்பார் என தெரிகிறது.