அஜீத்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘என்னை அறிந்தால்’. இதில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில், கூடிய விரைவில் படத்தின் ஆடியோவை வெளியிடவிருக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தை அமெரிக்காவில் வெளியிடும் உரிமையை பிரபல வெளியீட்டு நிறுவனமான அட்மஸ் என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் ஹைபர்பீஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை வெளியிடுகிறது. அட்மஸ் நிறுவனம் ஏற்கெனவே அஜீத்தின் வீரம் படத்தையும் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
‘என்னை அறிந்தால்’ வருகிற ஜனவரி 14-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. அஜீ