முதலில் ஏ.ஆர். ரஹ்மான் தனது குடும்பத்தார் பெயரை தமிழில் மாற்றட்டும் என தமிழக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தெரிவித்துள்ளார்.
இரு ஆஸ்கர் விருதுகளை குவித்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் மேடையிலேயே தமிழில் பேசி தமிழை உலகெங்கும் ஒலிக்க செய்தார். அத்துடன் 7 கோடி தமிழர்களையும் உலக அரங்கில் பெருமைப்படுத்தினார்.தமிழ் மீது அதிகம் பற்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் மொழிக்கு ஏதேனும் நெருக்கடி ஏற்படும் சமயத்திலும் இந்தி திணிப்பு குறித்து பேச்சுகள் வரும் சமயத்திலும் ஏ.ஆர். ரஹ்மான் குரல் கொடுப்பது வழக்கம்.
ஆங்கிலத்திற்கு மாற்று
ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ள நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூகவலைதள பக்கத்தில் தமிழ்த்தாய் தமிழின் அடையாளமான ழகரத்துடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர் என்ற பாடலை குறிப்பிட்டு தமிழணங்கு என பதிவிட்டிருந்தார்.
சிஐஐ மாநாடு
சென்னையில் நடந்து வரும் சிஐஐ மாநாட்டில் பங்கேற்று பேசிய ரஹ்மான், தமிழ் படங்களை எங்கு பார்த்தாலும் நாம் பெருமைப்பட வேண்டும் என்றார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பிய ஏ.ஆர்.ரஹ்மானிடம் இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தியை ஏற்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
தமிழ் தான் இணைப்பு மொழி
அப்போது அவர் தமிழ்தான் இணைப்பு மொழி என ஒற்றை வரியில் ஒரு கருத்தை தெரிவித்தார். இது வைரலாகி வருகிறது. மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஏ.ஆர். ரஹ்மானின் கருத்துக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழில் பெயர் வையுங்கள்
அந்த வகையில் பாஜக பொருளாளர் தம்பி AR ரக்மான் பேச்சை வரவேற்கிறேன். முதலில் ரக்மான் குடும்பத்தார் பெயரை தமிழில் மாற்றட்டும். துவாவை உருதுவிலிருந்து தமிழுக்கு மாற்றட்டும்…பிறகு தமிழக அரசு குறைந்தது ஒரு 5 இந்தி State ல் தமிழ் கற்பிக்க நிதி ஒதுக்கட்டும்… இதற்கு ரக்மான் உதவினால் தமிழ் பரவும் என ஏ.ஆர்.ரஹ்மானை டேக் செய்து கருத்து வெளியிட்டுள்ளார். ரஹ்மான் குடும்பத்தாரின் பெயர்களை மாற்ற சொல்ல நீங்கள் யார் என சமூகவலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன.