செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் கிஷோர் நடித்திருக்கும் ‘பாராசூட்’ எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் கிஷோர் நடித்திருக்கும் ‘பாராசூட்’ எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

1 minutes read

தென்னிந்திய சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களான கிஷோர்- கிருஷ்ணா ஆகிய இருவரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘பாராசூட்’ எனும் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அத்துடன் இந்த இணைய தொடர் எதிர்வரும் 29 ஆம் திகதி என்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

இயக்குநர் ராசு. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பாராசூட்’ எனும் இணைய தொடரில் கிஷோர், கனி, கிருஷ்ணா, காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன், பவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் குழந்தை நட்சத்திரங்கள் இருவர் அழுத்தமான வேடத்தில் தோன்றுகிறார்கள்.

ஸ்ரீதர் .கே இணைய தொடரின் கதையை எழுத, ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்த இணையத் தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்திற்காக நடிகரும், தயாரிப்பாளருமான கிருஷ்ணா தயாரித்திருக்கிறார்.

இந்தியாவின் பொழுதுபோக்கு டிஜிட்டல் தளங்களில் முன்னணியில் இருக்கும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் அசல் இணைய தொடர்களுக்கு டிஜிட்டல் தள பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது.

அந்த வகையில் இரண்டு சிறார்கள் அவர்களது பெற்றோர்களுக்கு தெரியாமல் மேற்கொள்ளும் துவி சக்கர வாகன பயணத்தை மையமாகக் கொண்டு விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் உருவாகி இருக்கும் இந்த இணைய தொடரின் முன்னோட்டத்திற்கு ரசிகர்களிடையே ஆதரவு பெருகி வருகிறது.

எட்டு அத்தியாயங்களாக உருவாகி இருக்கும் இந்த இணைய தொடர் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.