ஈரானில் முறையாக ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட இளம்பெண் பொலீஸ் காவலில் உயிரிழந்ததைக் கண்டித்து, இளம்பெண் ஒருவர் பொதுவெளியில் தனது முடியை தானே வெட்டிக் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
ஈரானில் 7 வயதுக்கு மேற்பட்ட சிறுமியர், பெண்கள் தலைமுடியை மறைத்தவாறு ஹிஜாப் அணிய வேண்டுமென்றும், தளர்வான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டுமென்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்ட 22 வயதான மஹ்சா அமினி என்ற பெண், கோமா நிலைக்கு சென்று உயிரிழந்ததை அடுத்து, ஈரானில் போராட்டங்கள் அதிகரித்துள்ளன