கறிவேப்பிலை அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு அற்புத மருத்துவம் நிறைந்த மூலிகையாகும். கறிவேப்பிலை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிகமாக கொண்டுள்ளது.
கறிவேப்பிலையில் குறிப்பாக உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது. ஏனெனில் இது செரிமான சக்தியை அதிகரித்தல், கொழுப்பை கட்டுப்படுத்துதல் மற்றும் கொழுப்பை எரிக்கும் திறன் ஆகியவை காரணமாக உடல் எடை குறைப்பிற்கு வெகுவாக உதவுகிறது என்று கூறப்படுகின்றது.
அந்தவகையில் கறிவேப்பிலையை எப்படி எடுத்து கொள்ளலாம்? உடல் எடையை குறைப்பு எவ்வாறு உதவுகின்றது என்பதை பார்ப்போம்.
எப்படி எடுத்து கொள்ளலாம்?
சுமார் 10 முதல் 20 கறிவேப்பிலை இலையை எடுத்து அதை தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்கவும்.
நன்றாக கொதிக்க பிறகு அதில் இருந்து இலைகளை அகற்றுவதற்காக தண்ணீரை வடிக்கட்டவும். வெறும் கறிவேப்பிலை தண்ணீர் சிலருக்கு பிடிப்பதில்லை.
ஏனெனில் இதில் பெரிதாக சுவை எதுவும் இருப்பதில்லை. எனவே சுவைக்காக எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
எவ்வாறு உதவுகின்றது?
இது கலோரிகளை எரிக்கவும் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கவும் உதவுகிறது. இதன் மூலமாக உடல் பருமன் ஏற்படுவதை தடுப்பதோடு ஏற்கனவே உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு எடையை குறைக்கவும் உதவுகிறது.
கறிவேப்பிலையில் மஹானிம்பைன் என்ற ஆல்கலாய்டு உள்ளது, இது உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. மேலும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
நன்றி | தமிழ் நியூஸ்