மாரடைப்பு ஏற்படும் அபாயம்
குறைந்த நேரம் தூங்குவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது போல், அதிகமான நேரம் தூங்குவதும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தூக்கம் என்பது நமது உடலுக்கு தேவையான, அவசியமான ஒன்றாகும். ஏனெனில் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதில் தூக்கத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.
குறிப்பாக நாள் முழுவதும் வேலை செய்வதால் உண்டாகும் சோர்வில் இருந்து தப்பிக்கவும், மறுநாள் வேலை செய்வதற்கும் தேவையான ஆற்றலை வழங்கும். குறிப்பிட்ட நேரத்தை விட அதிகம் தூங்கினால் என்ன ஆகும் என்பதை பற்றிய புரிதல் நமக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் அதிக நேரம் தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இங்கு காண்போம்.
எடை அதிகரிப்பு
உங்கள் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் 8 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்குவது தான். அதாவது எவ்வளவு அதிகம் தூங்குகிறீர்களோ அந்தளவுக்கு உடலில் கொழுப்பு அதிகரிக்கும். 21 சதவித உடல் எடை அதிகரிப்புக்கு காரணம் அதிக நேரம் தூங்குவது தான் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தலைவலி
அதிக நேரம் தூங்குவது தலைவலியை ஏற்படுத்தும். இதற்கு காரணம் நரம்பிய கடத்திகளில் ஏற்படும் செரோடினின் அளவின் மாறுபாடு அதிகரிப்பது தான். மேலும், அதிக தூக்கம் மைக்ராய்ன்களை தூண்டுவதுடன், காலை நேர பணிகள் அனைத்தையும் முடக்கும்.
முதுகு வலி
முதுகு வலி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதிக நேரம் தூங்குவது தான். அதாவது நீண்ட நேரம் ஒரே நிலையில் படுத்திருப்பது உங்கள் தசைகளில் விறைப்பு மற்றும் வலியை அதிகரிக்கிறது. எனவே முதுகு வலி உள்ளவர்கள் 7 மணிநேரத்திற்கு மேல் தூங்க வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வயதாகுதல்
அதிக நேரம் தூங்குவது நினைவாற்றல் பாதிப்பு, கவனமின்மை போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும் நீண்ட காலமாக அதிக நேரம் தூங்குவது உங்கள் மூளையை அதிக வயதாவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். குறிப்பாக வயதானவர்கள் நீண்ட நேரம் தூங்கும்போது அது அவர்களின் வயதை விட 2 வயது அதிகமாக உணரச்செய்யும்.
இதய மற்றும் சர்க்கரை நோய்
தினமும் 9 முதல் 11 மணி நேரம் வரை தூங்குபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 28 சதவிதம் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இதயத்தில் 38 சதவித அளவில் சிக்கல்களை ஏற்படுத்தும். அதிக நேரம் தூங்குவதால் உடல் எடை அதிகரிப்பும், சர்க்கரை நோய் பாதிப்பும் ஏற்படும். குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோய் அதிக நேரம் தூங்குவதால் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
சர்க்காடியன் ரிதம் கோளாறு
சர்க்காடியன் ரிதம் கோளாறு உடலுக்குள் நடக்கும் செயல்பாடுகளுக்கும், நமது தினசரி அட்டவணைகளுக்கும் இடையே வேறுபாடு ஏற்படும் போது உண்டாகும் நோயாகும். இதன் காரணமாக தூங்குவதில் சிக்கல், பகல் தூக்கம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
கருவுறுதலை குறைக்கும்
செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையில் இருக்கும் பெண்கள் எப்பொழுதும் அதிக நேரம் தூங்கக்கூடாது. அவ்வாறு தூங்கினால் கருவுறும் வாய்ப்பு 43 சதவிதம் குறையுமென மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல் 6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு 46 சதவிதம் இது அதிகரிக்கும்.
நன்றி | வவுனியா நெற்