நேற்று ஒரு தரமான சம்பவங்கள் நிறைந்த நாள். ஒரு படம் ஹிட்டடித்தால் கிரீடத்தோடு திரியும் இயக்குனர்களை அதிகம் பார்த்திருக்கிறேன். அதில் தேசியவிருது பெற்ற இயக்குனர் ஒருவர் துபாய் செல்லும்போது என் அருகில் அமர்வதா என நான்கு இருக்கைகள் மாற்றி அமர்ந்து கொண்டார்… சரி அவருக்கு என்ன ப்ராப்ளமோ..
ஆனால் இயக்குனர் லோகேஷ்கனகராஜ் முற்றிலும் மாறாக இருக்கிறார்.அடுத்தடுத்து மூன்று பிளாக் பஸ்டர் கொடுத்துவிட்டு நீட் எக்ஸாம் ரிசல்ட்டுக்கு காத்திருக்கும் மாணவனைப் போல அவ்வளவு பாந்தம். அரை மணி நேரங்கள் அருகே அமர்ந்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.
“சார் என்னைத் தெரியுதா..?.
“ஏங்க உங்களைத் தெரியாம இருக்குமா?”…என விருமாண்டி வசூல்ராஜா என பேசப்பேச..என்னைவிட கமல் சார் ரசிகன் யாரிருப்பா என்கிற கர்வத்தை பத்து நிமிடத்தில் நொறுக்கி விட்டார்.
“சார் உங்க படத்துல நடிக்க ஆவலா இருக்கேன் ஒரு வாய்ப்பு தாங்க… என்றதும்தான் தாமதம் பக்கத்தில் இருந்த அவரது உதவியாளரை அழைத்து
“சார் நம்பரை வாங்கிக்கோங்க.. நான் அழைக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து 5 படங்கள் கமல் சாரை வைத்து இயக்கிய K.S.ரவிக்குமார் சார் தலைக்கு மேலே கையைத் தட்டி இயக்குனர் லோக்கேஷ் கனகராஜை வரவேற்றதுதான்.. இவருக்கு கிடைத்த கவுரவம்.!
(இது எந்த மேடை என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன்)