நாம் பல உணவுகளை அதன் தன்மைகள் தெரியாமல் சாப்பிடுகின்றோம் சில உணவுகளை தவிர்க்கின்றோம். இவ்வாறு அவற்றின் நன்மை தீமை தெரியாமல் அதனை உட்கொள்வதனால் சில பாதகமான விளைவுகள் நம்மை சேர வாய்ப்புண்டு அதையே மருத்துவர்கள் விளக்கமாக சொல்கின்றனர்.
அதாவது நாம் எப்போது தயிரையும் மீனையும் ஒன்றாக சாப்பிடவே கூடாது அது உடலுக்கு தீமையை உண்டாக்கும். அடுத்து மாமிசங்களை எப்போதும் நல்லெண்ணையில் சமைத்து சாப்பிடவே கூடாது மரக்கறி உணவுகளை நல்லண்ணையில் சமைப்பது மிகவும் ஆரோக்கியமானது ஆகும்.
மேலும் இன்றைய மக்கள் பூண்டு , வெங்காயம் , இஞ்சியை உணவில் சேர்ப்பது இல்லை காரணம் அது உணர்வுகளை தூண்டக்கூடியது அது பிழையான கருத்து இவை கட்டாயம் உணவில் சேர்க்கவே வேண்டும் . வெங்காயம் உடலுக்கு தேவையான மிக நல்ல உணவு வெங்காயத்தின் குண இயல்பு என்னவென்றால் தேவையற்றதை அகத்துறிஞ்சி உடலில் இருந்து அதை அகற்றிவிடும் தன்மை கொண்டது.
இன்று நாம் காலை உணவுகளில் தோசை , இட்லி போன்றவற்றை சேர்க்கின்றோம். அது மிகவும் பிழையான உணவு முறை இது உடலில் பல விளைவுகளையே உண்டாக்க வல்லது அதற்கு பதில் நல்ல அவல் போன்ற நிறை குறைக்கும் உணவை தெரிவு செய்யலாம் என்பதே வைத்தியர்களின் அறிவுரை.
மேலும் உருளைக்கிழங்கு ,உளுந்து , கத்தரிக்காய் , கோவா போன்றவை அதிகம் எடுக்கும் போது சமிபாட்டு பிரச்சனை வர வாய்ப்புள்ளது.