முதலாம் உலக போர் இரண்டாம் உலக போரை தொடர்ந்து மிக பெரிய போராக ரஸ்யா – உக்ரைன் போர் தொடர்ந்து 10 மாத காலத்தை கடந்து நடை பெற்று வரும் நிலையில் போர்நிறுத்தம் இல்லை என்பதே ரசியாவின் முடிவாக உள்ளது. போரில் பல வியூகங்கள் பயன்படுத்த பட்டு வருகிறது. ஆளில்லாத விமானங்கள் (ட்ரோன்கள்) தாக்குதலில் இரு நாடும் முனைப்பாக உள்ளது.
நேற்றைய தினம் (14.12.2022) ரசியா உக்ரைனின் தேசிய கட்டிடங்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட போது 2 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
மேலும் ரசியா பெலாரஸ் இராணுவ வீரர்களுடன் இணைந்து கடும் போர் பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்ற காணொளிகளை வெளியிட்டுள்ளன.
மறுபக்கம் ரசிய வீரக்கல் உக்ரைனிடம் சரணடைய விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்பதை காணொளியாக செய்து ரசிய மொழியில் ஒளிபரப்பி வருவதுடன் ட்ரான் முன் என்ன செய்தால் சரணடையலாம் என்பதையும் ஹட் லைன் இலக்கத்தையும் வழங்கியுள்ளது .
அதன் நட்பு நாடுகள் உதவியாக 1 பில்லியன் வழங்கியுள்ளது மேலும் அதி நவீன வாணிபத்துகாப்பு அமைப்புக்களை அனுப்பவும் அமேரிக்கா பரிசீலித்து வருகிறது .
இன்னும் போர் உச்சம் பெற்று வரும் நிலையில் பல்கெரியாவில் நேட்டோ படை (அல்பேனிய, கிறிஸ்,வடக்கு மாசிடோனிய,மாண்பினீக்ரோ மற்றும் அமேரிக்கா) பயிற்சி இத்தாலி முன்னிலையில் இடம் பெறுகிறது . மேலும் பல்கெரியாவில் நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளது.