உலக பொருளாதார நெருக்கடி பல வகையிலும் பாதித்து வரும் நிலையில் பாகிஸ்தானில் பெரிய அளவிலான மாற்றங்களை அங்கு வாழும் மக்கள் எதிர் கொண்டு வருகின்றனர்.
ஆனால் எரிவாயுவை பிளாஸ்டிக் பையில் நிரப்பி வைத்து பாவிக்கும் அளவுக்கு அந்நாட்டு நிலை உள்ளதென்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பணவீக்கத்தால் அத்தியாவசியப்பொருட்கள் விலை அதிகரித்துள்ள நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அங்கு மக்கள் பிளாஸ்டிக் பைகளில் எரிவாயுவை நிரப்பி செல்கின்றனர்.
அரசு சிலிண்டர் உற்பத்தி போதிய அளவு இல்லை என்பதை வலியுறுத்தி வரும் நிலையில் மக்கள் இவ்வாறு செய்கின்றனர்.குறிப்பாக கைபர் பக்க்துங்வா என்ற மாகாணத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாகுறையால் மக்கள் இந்நடவடிக்கையை செய்வது வீடியோவாக வைரலாகிறது