உக்ரைன்- ரசிய போர் மிகவும் உக்கிரமாக நடந்து வரும் நிலையில் பல நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆரம்பத்திலிருந்து இன்று வரை உதவிகளை செய்து வருகின்றன.
அதில் குறிப்பிட்ட சில நாட்களாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உதவி கோரி வரும் நிலையில் பல மேலைத்தேய நாடுகள் உக்ரைனுக்கு உதவ முன் வந்துள்ளது.
அமெரிக்க, ஜேர்மன் இராணுவ உதவியையும் பிரான்ஸ் கவச போர் வாகனங்களை அனுப்பவும் முன்வந்துள்ளது. மேலும் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் ஜேர்மன் அதிபர் சோல்ஷும் உதவி வழங்க தயாராக உள்ளதாக உறுதி அளித்துள்ளனர்.
அதற்கேற்றாற் போல் 3 பில்லியன் டாலர் அளவிலான ஆயுத உதவியையும் தானியங்கி பீரங்கியையும் , கவச வாகனங்களையும் , மார்ட்(இலகு பீரங்கிகள் ), பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையையும் வழங்க உள்ளது என்பது வெள்ளைமாளிகை தகவல் ஆகும் .