உலகின் மிகப்பெரிய விலங்காக காணப்படும் யானை இனம் இதில் அரிய வகை இனமான ஆபிரிக்க யானைகள் காணப்படுகிறது இப்போது இது அழிவின் பாதையில் சிகப்பு நிறுத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. ஆசிய யானைகளை விட வலியதாக பார்க்கப்படும் இந்த ஆபிரிக்க யானைகள் இன்று எண்ணிக்கையில் குறைந்து செல்கின்றதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்வுண்மை அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலை கழக மாணவர்களின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
குறிப்பாக கடந்த 1800 ஆம் ஆண்டில் 2 1/2 கோடியாக காணப்பட்ட இந்த யானையினம் 4 லட்சமாக இப்போது காணப்படுகிறது. இது ஒப்பீட்டளவில் மிக குறைந்த எணிக்கையாக பார்க்கப்படுகிறது .
இதற்கு பெரிய காரணம் இப்போது நிலவும் காலநிலை மாற்றமாகும் . அதிகளவில் வெப்பம் நிலவும் போது இந்த யானைகள் நீர் தேடி செல்லும் போதே இறக்க நேரிடுவதா ஆய்வுகளின் முடிவில் தெரிய வருகின்றது.