கடலில் சுமார் 171 டிரில்லியனுக்கும் (171 இலட்சம் கோடி இந்திய மதிப்பு) அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பதாக பெருங்கடலின் தூய்மை தொடர்பான சர்வதேச விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவசர கொள்கை நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 2040ஆம் ஆண்டில் பெருங்கடலில் பிளாஸ்டிக் துகள்கள் மிதக்கும் விகிதம் சுமார் 2.6 மடங்கு அதிகரிக்கக்கூடும் என்றும் சர்வதேச விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச விஞ்ஞானிகள் குழு, 1979 மற்றும் 2019க்கு இடையில் அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்கள் மற்றும் மத்தியதரைக் கடலில் உள்ள 12,000 மாதிரிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பதிவுகளை ஆய்வு செய்தது.
இதில், 2005ஆம் ஆண்டு முதல் உலக பெருங்கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டில் விரைவாக முன்னேறி வருவதை கண்டறிந்தனர். இது தற்போது மிக விரைவாக அதிகரித்துள்ளது.