சிம்பு கெட்டவன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் கதை சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் நிஜத்தில் நடந்த காதல் கதை என கூறப்படுகிறது.
இருவரும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்த போது நட்பானார்கள். பிறகு காதல் வயப்பட்டனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தார்கள். ஆனால் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். அப்போது ஒருவருக்கொருவர் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.
காதல் முறிந்து விட்டது என்று நயன்தாரா வெளிப்படையாகவே அறிவித்தார். பிறகு இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அதன் பிறகு இருவரும் நீண்ட நாட்கள் சந்திக்கவே இல்லை. நயன்தாரா வேறு நடிகர் படங்களில் பிசியாக நடித்தார். அப்போது பிரபுதேவாவுடன் காதல் மலர்ந்தது, சிம்புவும் ஹன்சிகாவுடன் காதல் வயப்பட்டார். தற்போது இரண்டாவது காதலிலும் இருவரும் தோற்றுள்ளனர்.
இதனால் சிம்பு, நயன்தாரா இடையே மீண்டும் நட்பு துளிர்விட்டுள்ளது அதன் தொடர்ச்சியாக ‘இது நம்ம ஆளு’ படத்தில் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். நயன்தாராவுடனான காதலை தான் கெட்டவன் என்ற பெயரில் படமாக சிம்பு எடுக்கிறார்.
இது பற்றி நயன்தாராவுக்கு தெரிந்ததும் எதிர்ப்பு தெரிவித்தாராம். எனது காதல் கதையை படமாக்க கூடாது என்ற கண்டிப்போடு கூறினாராம். இதனால் நயன்தாராவை சமரசப்படுத்தும் முயற்சியில் சிம்பு ஈடுபட்டுள்ளார்.