சென்னையில் உள்ள 2000 சிசிடிவி கேமராக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், 3 புதிய பெருநகர காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
சட்டப் பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர், தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள மாநில நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக Anti Terrorism Squad எனப்படும் தீவிரவாத தடுப்புப்பிரிவு அமைக்கப்படும் என்றார்.
மேலும், ஆருத்ரா போன்ற நிதி நிறுவனங்கள் மக்களின் ஆசையை தூண்டி மோசடியில் ஈடுபடுவதாகவும், அதுபோன்ற நிதி நிறுவனங்களை கண்காணிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அறிவித்தார்.