ஒரு வாணலியில் அரிசித் தவிடு மற்றும் உப்பை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். அதை பருத்தித் துணியில் மூட்டையாகக் கட்டிக்கொள்ள வேண்டும். இதைக்கொண்டு குதிகால் பகுதியில் தினமும் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும்.
நொச்சி இலையின் சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சூடுபடுத்த வேண்டும்.
இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு இந்த எண்ணெய்யை குதிகாலில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் குதிகால் வலி நீங்கும்.
உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் எடையைக் குறைக்கலாம். இதன்மூலம் குதிகால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
திராட்சை பழச்சாறில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அதைத் தொடர்ந்து பருகுவதன் மூலம் குதிகால் வலி கட்டுப்படும்.
வில்வக்காயை நெருப்பில் சுட்டு, அதைக்கொண்டு குதிகாலில் வலி உள்ள பகுதியில் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.
பாதங்களுக்குரிய எளிய பயிற்சிகளை செய்வதன் மூலம் குதிகால் வலியில் இருந்து விடுபடலாம்.