எலான் மஸ்க் புதிய திட்டம் . டெஸ்லா சி.இ .ஓ எலான் டெஸ்லாதொழிற்சாலையை அமைக்க இந்தியா ஆர்வத்துடன் உள்ளதாக கூறியுள்ளார் .
இது குறித்து மேலும் அவர், இந்தாண்டின் இறுதியில் புதிய தொழிற்சாலை அமைய உள்ள இடத்தை தேர்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். உலகளாவிய உற்பத்தியை விரிவுபடுத்தும் முயற்சியாக மெக்சிகோவில் தனது ஆலையை திறக்கப்போவதாக டெஸ்லா ஏற்கனவே அறிவித்திருந்தது.
தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அண்மையில் இந்தியாவில் தமது உற்பத்தி தளத்தை நிறுவுவதற்காக டெஸ்லா நிறுவனம் தீவிரமாக திட்டமிட்டு வருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.