1
இலங்கையில் இந்த ஆண்டில் நேற்று வரையான காலப்பகுதியில் (5 மாதங்கள் 26 நாட்கள்) 32 பேர் துப்பாக்கிப் பிரயோகத்துக்குள்ளாகி சாவடைந்துள்ளனர்.
இதே காலப்பகுதியில் துப்பாக்கிச்சூடு காரணமாக 15 பேர் காயமடைந்துள்ளனர்.
நாட்டிலுள்ள 9 மாகாணங்களின் பொலிஸ் புள்ளிவிபரங்களின்படி இந்தத் தகவல் வெளியாளியுள்ளது.
வடக்கு, கிழக்கு உட்பட ஒன்பது மாகாணங்களிலும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கமைய மேல் மாகாணத்தில் துப்பாக்கிச்சூட்டால் அதிகளவு மரணங்கள் பதிவாகியுள்ளன.