அமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து ஏமனில் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ஹௌதி கிளர்ச்சியாளர்களின் நிலத்தடிக் கிடங்கை நேற்று (ஜனவரி 22) நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறிவைத்தன.
செங்கடலில் ஹௌதி குழு தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தும் ஏவுகணைகள், வேவுச் சாதனங்கள் ஆகியவையும் குறிவைக்கப்பட்டன.
இஸ்ரேல், காஸா மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில் பாலஸ்தீனர்களுக்குத் தங்களுடைய ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் தாக்குதல்களை நடத்தி வருவதாக ஹௌதி குழு குறிப்பிட்டது.
அதனால் அனைத்துலகக் கப்பல் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலகப் பணவீக்கம் பற்றிய அச்சமும் நிலவுகிறது.
ஆஸ்திரேலியா, பஹ்ரேன், கனடா மற்றும் நெதர்லந்து ஆகிய நாடுகளின் ஆதரவோடு அமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து ஏமனில் 8 தாக்குதல்களை நடத்தின.
6 நாடுகளும் கையெழுத்திட்ட கூட்டறிக்கையில் அந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல்கள், சுய-தற்காப்புக்காக நடத்தப்பட்டதாக இங்கிலாந்து தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.
மூலம் : Reuters