இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிரான கருத்துகள் தற்காலத்தில் அதிகாரித்து வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா செய்யவில்லையென்றால், எதிர்வரும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடையும் என்று அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான Sir Simon Clarke கூறியுள்ளார்.
சட்டவிரோத புலம்பெயர்வு விவகாரம் இங்கிலாந்து அரசியலில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
புகலிடக் கோரிக்கையாளர்களை இங்கிலாந்தை விட்டு வெளியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சியினர் சிலர் விரும்புகின்றனர்.
ஆனால், இத்தத் திட்டத்தை நாடாளுமன்ற மேலவை தோற்கடித்துள்ளது.
தொடர்புடைய செய்தி : புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் மசோதா மேலவையில் தோல்வி
அதாவது, ருவாண்டா பாதுகாப்பான நாடு என இங்கிலாந்து அரசு நிரூபிக்கும்வரை, புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் சட்டம் அமுலுக்கு வராதவகையில், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் வாக்களித்து ருவாண்டா திட்டத்தை தாமதப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையிலேயே, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிரான கருத்தை மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் Sir Simon Clarke முன்வைத்துள்ளார்.
இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் இங்கிலாந்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், புகலிடக் கோரிக்கையாளர் விடயத்தில் அரசு உறுதியாக இல்லாததால், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, முக்கிய வாக்காளர்களை இழந்துவிட்டதாக Sir Simon Clarke கூறியுள்ளார்.
ஆகவே, வரும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிபெறவேண்டுமானால், ரிஷி சுனக் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் எனவும்
பெரும்பான்மையோரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒருவர்தான் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக வேண்டும் என்று கூறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மூலம் : பிபிசி