செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக் களம்!

யாழில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக் களம்!

0 minutes read

‘மக்கள் மன்றில் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும்’ எனும் தலைப்பில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக் களம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் இன்று  மாலை இந்த நிகழ்வு நடைபெற்றது.

தமிழர் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமாகியது.

இதில் முதலாவது ஈகச்சுடரை எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளார் ஏற்றியதைத் தொடர்ந்து மதகுருமார்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏற்றி வைத்தனர்.

இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கட்சிப் பிரதிநிதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள் எனப் பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.