சர்வதேச அளவில் அகதிகள் தொகை அதிகரித்து வருவதாக ஐக்கிய நாட்டு நிறுவன அகதிகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகில் தற்போது 120 மில்லியன் மக்கள் அகதிகளாக உள்ளனர் என்றும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு, கடந்தாண்டு சுமார் 117 மில்லியன் மக்கள் அகதிகள் இருந்துள்ளனர்.
இவ்வாண்டு முதல் நான்கு மாதங்களில் மேலும் மூன்று மில்லியன் பேர் அகதிகளாக மாறியுள்ளனர். ஏப்ரல் மாதக் கடைசி வரை உள்ள கணக்கை குறித்த அறிக்கை காட்டுகிறது.
போர், வன்முறை மற்றும் அடக்குமுறை ஆகியவை மக்கள் அகதிகளாக செல்லக் காரணங்கள் என்றும் ஐக்கிய நாட்டு நிறுவன அகதிகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
காஸா, மியன்மார் மற்றும் சூடான் ஆகிய இடங்களில் மோதல் நடைபெறும் நிலையிலேயே சர்வதேச அளவில் அகதிகள் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
12 ஆண்டாகத் தொடர்ந்து அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும் ஐக்கிய நாட்டு நிறுவன அகதிகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.