இஸ்ரேலியப் படைகள் திங்கள்கிழமை அதிகாலை காசா நகரைத் தாக்கியுள்ளன.
அக்டோபர் 7 ஆம் திகதிக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்று என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெவ்வேறு திசைகளில் இருந்து நகரின் மையப்பகுதிக்கு இஸ்ரேலியப் படைகள் டாங்கிகளை அனுப்பியதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கிழக்கு காசா பகுதிகளில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக தாங்கள் நம்புவதாக காசா சிவில் அவசர சேவை கூறியது.
ஆனால், டெல் அல்-ஹவா, சப்ரா, தராஜ், ரிமால் மற்றும் துஃபா புறநகர் பகுதிகளில் நடந்து வரும் தாக்குதல்களால் அவசரகால குழுக்களால் மக்களை அடைய முடியவில்லை.