விபத்தில் தனது குடும்பத்தை இழந்த இங்கிலாந்துச் சிறுமிக்கு £210,000க்கும் அதிகமான நன்கொடை திரட்டப்பட்டுள்ளது.
வேக்ஃபீல்ட் (Wakefield) மற்றும் பார்ன்ஸ்லிக்கு (Barnsley) இடையில் A61 மைல்கல் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஷேன் ரோலர் – ஷேன்னென் மோர்கன் தம்பதி மற்றும் அவர்களது மகள்களான ரூபி (9 வயது) மற்றும் லில்லி (4 வயது) ஆகிய நால்வரும் உயிரிழந்தனர்.
குறித்த தம்பதியருக்கு 11 வயதில் மற்றொரு மகள் இருந்தாள். விபத்து நடந்தபோது அவர்களுடன் அவள் இருக்கவில்லை. எனவே, உயிர் தப்பினார்.
இந்நிலையில், உயிரிழந்த தம்பதியின் குடும்ப நண்பர் பால் ஹெப்பிள் என்பவர், GoFundMe இல் “ஒரு நொடியில் தன் முழு உலகத்தையும் இழந்துவிட்டாள் சிறுமி” எனக் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, மேற்படி 11 வயதுச் சிறுமிக்கு 12,000க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்களால் மொத்தம் £213,000 நன்கொடை இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
சிறுமி, தற்போது அத்தையில் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் உள்ளார். மேற்படி நன்கொடை “நன்கொடைகளை நிர்வகிப்பதற்கு முழுப் பொறுப்பு” என்றும், அவை சிறுமியின் “வாழ்க்கைச் செலவுகள், கல்வி மற்றும் அவளுக்குத் தேவைப்படும் ஆலோசனைகள் உட்பட நலனுக்காகப் பயன்படுத்தப்படும்” என்றும் ஹெப்பிள் தெரிவித்துள்ளார்.