செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 10 இலட்சம் ரூபாவை வெல்லப்போவது றினோன் கழகமா? நியூ ஸ்டார் கழகமா?

10 இலட்சம் ரூபாவை வெல்லப்போவது றினோன் கழகமா? நியூ ஸ்டார் கழகமா?

2 minutes read

கலம்போ – சிட்டி சவால் கிண்ண கால்பந்தாட்டத்தில் வெற்றிக் கிண்ணத்தையும் 10 இலட்சம் ரூபா பணப்பரிசையும் வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் றினோன் – நியூ ஸ்டார் கழகங்களுக்கு இடையிலான இறுதிப் போட்டி சிட்டி லீக் மைதானத்தில் சனிக்கிழமை (10) பிற்பகல் நடைபெறவுள்ளது.

கொழும்பு கால்பந்தாட்ட லீக்கின் 112ஆவது வருட நிறைவை முன்னிட்டு இந்த அழைப்பு நொக்அவுட் கால்பந்தாட்டப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

கொழும்பு கால்பந்தாட்ட லீக்கில் முதலாம் பிரிவில் அங்கம் வகிக்கும் நான்கு கழகங்களும் சிட்டி கால்பந்தாட்ட லீக்கில் முதலாம் பிரிவில் அங்கம் வகிக்கும் நான்கு கழகங்களும்  இப் போட்டியில்  பங்குபற்றின.

கொழும்பு லீக் கழகங்கள் ஒரு குழுவிலும் சிட்டி லீக் கழகங்கள் மற்றொரு குழுவிலும் பங்குபற்றிய இந்த நொக் அவுட் போட்டியில் இரண்டு கட்டங்களைக் கொண்ட கால் இறுதிகளும் தொடர்ந்து அரை இறுதிகளும் நடத்தப்பட்டன.

கொழும்பு லீக் குழு

இரண்டு கட்ட கால் இறுதிகளில் ஒல்ட் பென்ஸ் கழகத்தை சந்தித்த நியூ ஸ்டார் கழகம் முதலாவது கால் இறுதியில் 2 – 0 என்ற கோல்கள் அடிப்படையிலும் இரண்டாவது கால் இறுதியில் 2 – 1 என்ற கோல்கள் அடிப்படையிலும் வெற்றிபெற்று  அரை இறுதிக்கு முன்னேறியது.

அரை இறுதிப் போட்டியில் ரட்ணம் கழகத்துடனான போட்டியை நியூ ஸ்டார் கழகம் 1 – 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டது.

இதனை அடுத்து வழங்கப்பட்ட பெனல்டிகளில் 4 – 3 என்ற அடிப்படையில் நியூ ஸ்டார் கழகம்  வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

சிட்டி லீக் குழு

இரண்டு கட்ட கால் இறுதிகளில் மாளிகாவத்தை யூத் கழகத்தை முதலாவது கால் இறுதிப் போட்டியில் 1 – 0 என்ற கோல் அடிப்படையிலும் இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் 3 – 0 என்ற கோல் அடிப்படையிலும் வெற்றிபெற்று  றினோன் கழகம்   அரை இறுதிக்கு முன்னேறியது.

தொடர்ந்து அரை இறுதிப் போட்டியில் சோண்டர்ஸ் கழகத்தின் கடும் சவாலுக்கு மத்தியில் றினோன்   கழகம்   4 – 3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.

இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள இரண்டு கழகங்களில் றினோன் கழகம் சற்று பலம்வாய்ந்ததாகத் தென்படுகிறது. எனினும் போட்டிக்கு போட்டி முன்னேற்றத்தை வெளிப்படுத்திவரும் நியூ ஸ்டார் கழகம் கடும் சவாலாக விளங்கும் என கருதப்படுகிறது.

அனுபசாலியான எம்.சி.எம். ரிஸ்னியின் தலைமையிலான றினோன் கழகத்தில் முன்னாள் தேசிய வீரர்களான எம்.என்.எம். பஸால், கவிந்து இஷான், எம். ஹக்கீம், எம். ஆக்கிப் ஆகியோர் இடம்பெறுவது அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைகிறது.

அவர்களை விட கோல்காப்பாளர் எம். முஷ்பிர், எம். ஹசன், எம். அக்கீம், ஷமில் அஹானெத், எச்.ஆர். ராஸா, எம். அஷாத் ஆகியோர் முதல் பதினொருவர் அணியில் இடம்பெறவுள்ளனர்.

எம். முஜீப், எம். அமான், எம். ஷஹில், எவ். அஹ்மத், சி. அஞ்ச், டபிள்யூ. டயஸ், எல். லிவேஸ்காந்த், ஏ. ஆர். சஃபான், எம். அப்துல்லா, எம். சுஹெய்ப், எம். பண்டார, எம். ஏ. ஆனீஸ், எம். பர்வீஸ் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

றினோன் கழகத்தின் தலைமைப் பயிற்றுநராக ஏ.ஏ.எப்.எப். ரஹ்மான் செயற்படுகிறார்.

எம். அஸாம் தலைமையிலான நியூ ஸ்டார் கழகத்தில் டி.ஜி.ஐ. பெர்னாண்டோ, சமீர கிறிஷான்த, எம். ரிமாஸ், ரீ. அஸ்லாம், நதீக்க புஷ்பகுமார, எம். சாகிர், மொஹமத் அனாஸ், எம். பஸூல், அப்துல் ரஹீம், ஆஷிக் அஹமத் ஆகியோர் முதல் பதினொருவர் அணியில் இடம்பெறவுள்ளனர்.

அவர்களை விட ஏ. ஷரீவ், எம். ஆத்திப், எம். ரிமாஸ், எம். மஸியாத், எம். அத்தீப், எம். பாதிக், எம். உஸ்மான், எம். உமர், ஏ. ரஹ்மான், எம். உமர், எம். ஹஸ்லான், அப்துல் ஹசன், ஜீ.ஏ.கே. ப்ரியன்கர ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

நியூ ஸ்டார் கழகத்தின் தலைமைப் பயிற்றுநராக மொஹமத் ஹஸ்லான் செயற்படுகிறார்.

இறுதிப் போட்டியில் அதிசிறந்த வீரரும் அதிசிறந்த கோல்காப்பாளரும் தெரிவுசெய்யப்பட்டு விடேச விருதுகள் வழங்கப்படும்.

இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 5 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்படும்.

அத்துடன் இரண்டு அணிகளினதும் வீரர்களுக்கு பதக்கங்களும் சூட்டப்படும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More