புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கிளிநொச்சி பரந்தனில் சுப்பிரமணியம் இராசம்மா நினைவாலயம் திறப்பு விழா!

கிளிநொச்சி பரந்தனில் சுப்பிரமணியம் இராசம்மா நினைவாலயம் திறப்பு விழா!

1 minutes read

கிளிநொச்சிப் பரந்தன் குமரபுரத்தின் மூத்தகுடிகளான வே. சுப்பிரமணியம் இராசம்மா தம்பதியர் நினைவாலயம் எதிர்வரும் 23ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது.

திரு சுப்பிரமணியம் அவர்கள் பிறந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையிட்டு அவரது நூற்றாண்டு நிகழ்வுகளை முன்னெடுக்கும் விதமாக அவர்கள் தாய் தந்தையராக  வாழ்ந்த இடத்தில் அவர்களுக்கு அழகிய நினைவாலயம் ஒன்றினை அமைக்க குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.

நூற்றாண்டு விழாவும் நினைவாலய திறப்பு விழாவும் நவம்பர் மாதம் 23ம் திகதி நடைபெற உள்ளது. இவ் அழைப்பிதழை ஏற்றுக்கொண்டு நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்க சுப்பிரமணியம் இராசம்மா குடும்பத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

வே. சுப்பிரமணியம் இராசம்மா தம்பதியர் நினைவாலயம், கிளி பரந்தன் இந்து மகா வித்தியாலயம் முன்பாக அமையப்பெறுகின்றது. அத்துடன் குறித்த நினைவாலயத்தில் ஈழத்தின் தமிழ் அறிஞர்களின் சிலைகளும் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More