இங்கிலாந்தில் இரு வாரங்களாக ஆங்காங்கே ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் கடந்த திங்கட்கிழமை வரை 13 வயது சிறுமி உட்பட 975 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்கும் ஹோட்டலுக்கு வெளியே அமைதியின்மை ஏற்பட்டதைத் தொடர்ந்து மேற்படி சிறுமி கைதுசெய்யப்பட்டார்.
சட்ட காரணங்களுக்காக பெயரிட முடியாத அந்த சிறுமியை, Basingstoke மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணையின் போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் வட மேற்கு இங்கிலாந்து, சவுத்போர்ட் (Southport) நகர நடனப் பள்ளியில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 3 சிறுமிகள் மரணித்தனர்.
தொடர்புடைய செய்தி : Southport போராட்டம்; 100க்கும் அதிகமானோர் கைது!
இந்த கத்திக்குத்துத் தாக்குதலை நடத்தியவர் ஒரு புகலிடக் கோரிக்கையாளர் என்றும் முஸ்லிம் என்றும் பரவிய செய்தியால் ஆங்காங்கே பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் கடந்த திங்கட்கிழமை வரையான நிலவரப்படி, அமைதியின்மை காரணமாக 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 546 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று தேசிய காவல்துறைத் தலைவர்கள் கவுன்சில் (NPCC) தெரிவித்துள்ளது.
இதுவரை எட்டு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 12 வயதுடைய இரு சிறுவர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்காக தண்டனை பெற்ற இளையவர்களாக உள்ளனர்.
25 வயது இளைஞன் ஒருவர், கேரேஜ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது 09 வாகனங்களை சேதப்படுத்தியுள்ளார். மற்றும் மூன்று ருமேனிய ஆண்கள் பயணித்த காரைத் தாக்க உதவியுள்ளார். அவர்களை தங்கள் வாகனத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். 100க்கும் மேற்பட்ட “கோபமடைந்த” நபர்கள் அவரை காரிலிருந்து இழுத்துச் செல்ல முயன்று, தலையில் குத்தி, உலோகக் கம்பியால் தாக்க முயன்றதை அடுத்து, அவர் உயிருக்கு அச்சம் வெளியிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி : அஞ்சலி நிகழ்வில் குவிக்கப்பட்ட பொம்மைகள்!