அவுஸ்திரேலிய அமைச்சரவையில் கேரளாவில் பிறந்த ஒருவருக்கு வாய்ப்பு கிட்டியதையடுத்து, அந்நாட்டில் அமைச்சராகும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
கோட்டயம் மாவட்டம், பலா மூன்நிலவு என்ற பகுதியில் பிறந்தவர் ஜின்சன் ஆண்டோ சார்ல்ஸ். 35 வயதான இவர், கடந்த 2011இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்து சென்று அங்கு ‘டொப்மென்டல்’ மருத்துவ மையத்தின் இயக்குநராகவும், சார்லஸ் டார்வின் பல்கலைக்கழக பேராசிரியராகவும் பணியாற்றினார்.
இந்நிலையில், ஆஸி. வடக்கு மாகாணத்தின் சாண்டர்சன் என்ற பகுதியில் நடந்த தேர்தலில் ஜின்சன் எம்.பியாக தெரிவுசெய்யப்பட்டார்.
இவருக்கு அந்நாட்டு அமைச்சரவையில் விளையாட்டு, இளைஞர்கள் நலம், கலாசார துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.