புற்றுநோய்கான சிகிச்சையின் பின்னர் வேல்ஸ் இளவரசி கேட் முதன்முதலில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) பணிக்குத் திரும்பினார்.
குழந்தைப் பருவத் திட்டத்தைப் பற்றிய கூட்டம் ஒன்று, வின்ட்சர் கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இளவரசி கேட் தனது பணியை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பியிருந்தார்.
இது கடந்த வாரம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த இளவரசி, தனது கீமோதெரபி முடிந்துவிட்டதாகவும் விரைவில் பொது வேலையில் ஈடுபடவுள்ளதாகவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
“நம்பமுடியாத அளவிற்கு இந்த ஆண்டு கடினமானது” என்றும் இளவரசி கூறியிருந்தார்.
மேற்படி கூட்டத்தின் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், இளவரசி கேட்ரின் முதன்மையான திட்டங்களில் ஒன்று, ஷேப்பிங் அஸ் பிரச்சாரம் ஆகும். இது குழந்தைப் பருவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. அதை அவர் தனது “வாழ்க்கையின் வேலை” என்று விவரித்தார்.