2024ஆம் ஆண்டின் “Good Childhood” அறிக்கை, இங்கிலாந்துக்கு மிகவும் சவாலாக அமைந்துள்ளது.
அறிக்கையின்படி, சிறுவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையில் போலந்து (24.4%) மற்றும் மால்டா (23.6%) ஆகிய நாடுகளை விட இங்கிலாந்து மிக மோசமான இடத்தில் உள்ளது.
25.2 சதவீத இங்கிலாந்து சிறுவர்கள் தங்கள் வாழ்க்கையில் திருப்தியில்லை என கருத்து வெளியிட்டுள்ளனர்.
சமூகச் சமநிலை இன்மை, உணவுக் குறைபாடு, வறுமை மற்றும் மன அழுத்தம் இவற்றுக்குரிய காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
11 சதவீதம் குழந்தைகள் போதிய உணவின்மை காரணமாக தவிக்கின்றனர். மேலும் இவற்றில் 50 சதவீத குழந்தைகள் பொழுதுபோக்குச் செயல்பாடுகளில் ஈடுபட முடிவதில்லை.
அத்துடன், விலைவாசி உயர்வு, சமூக குற்றச்செயல்கள் மற்றும் பாடசாலை வாழ்வில் ஏற்பட்டிருக்கும் அழுத்தங்கள் சிறுவர்களின் நலனை மேலும் பாதிப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
2.7 இலட்சம் இங்கிலாந்து சிறார்கள் தாங்கள் கொண்ட மன அழுத்த பிரச்சினைகளுக்கு உதவி பெற காத்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நெதர்லாந்து, பின்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் சிறுவர் நலனில் சிறப்பாக செயல்படுகின்றன. இந்நாடுகளில் வாழ்க்கை திருப்தியின்மை குறைவாக (10.8% – 11.3%) பதிவாகியுள்ளது.