உலகளாவிய ரீதியில் சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று வியாழக்கிழமை (03) அனுஷ்டிக்கப்படுகிறது.
உலகளவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 30 இலட்சம் மக்கள் மது பாவனைக்கு அடிமையாகி உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மது பாவனையினால் நாளொன்றுக்கு ஏறக்குறைய 50 பேர் உயிரிழப்பதாகவும், வருடாந்தம் 237 பில்லியன் ரூபா நோயாளர்களுக்காக அரசாங்கம் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் மது பாவனையை குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைபடுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை செய்யப்பட்டுள்ளதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்களை இன்று (03) மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.