கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம், இலங்கையில் வசிக்கும் ரஷ்ய நாட்டுப் பிரஜைகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் ரஷ்ய பிரஜைகள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், நெரிசலான இடங்களுக்கு செல்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி : சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும்
சுற்றுலாவுக்கு பெயர் போண கிழக்கு மாகாண, அறுகம்பை பகுதியில் வெளிநாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இலங்கை பொலிஸார் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான இங்கிலாந்து உயர்ஸ்தானிகராலயம் இலங்கைக்கான பயண ஆலோசனையையும் புதுப்பித்துள்ளது.
அறுகம்மை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள பயண ஆலோசனைக்கு அமைய, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி : சுன்னாகம் வாசி சிக்கியமையால் அறுகம்பே தாக்குதல் சதி அம்பலம்!