“நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு இணைய நோயின்றி வாழ்ந்தோமானால் அளவற்ற செல்வத்தை பெற்றவர்கள் ஆகின்றோமல்லவா? நோயின்றி வாழும் வழி பற்றி எம் தமிழ் மருத்துவமான சித்தமருத்துவத்தில் இவ்வாறு எடுத்துரைகுகப்படுகிறது.
“உணவே மருந்து” அதாவது நாம் எமது உணவில் நமது ஆரோக்கிய வாழ்விற்கு தேவையானவற்றை நாள்தோறும் சேர்த்து வந்தாலே நோயென்ற ஒன்று எம்மை அணுகாது, மருந்தென்றவொன்று எமக்கு தேவைப்படாது.
எம் முன்னோர்கள் தங்கள் உணவில் சேர்த்துக்கொண்ட இயற்கை தாணியங்கள் மரக்கறிவகைகள் பழங்கள் மற்றும் மூலிகை வகைகள் மூலம் நோயின்றி பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்று நாமோ சிறுவயதிலேயே மருத்துவமனைகளை நாடி நிற்கின்றோம்.
இன்று நாம் எமக்கு ஏற்படும் சிறுநோய்களுக்குக் கூட உடனடியாக ஆங்கில மருந்துகளை பயன்படுத்துகிறோம். அது விரைவாக ஆறுதல் தந்தாலும் பல பக்கவிளைவுகளை நாம் அறியாவண்ணம் மெதுமெதுவாக ஏற்படுத்துகிறது என்பதே நிதர்சனமான உண்மை.
அன்று எம் முன்னோர்கள் ஏதும் நோய்வாய்ப்பட்டால் தங்களது மூலிகைத் தோட்டத்தில் அல்லது சூழலில் இயற்கையாகவே காணப்படும் மூலிகைகளைக் கொண்டே மருந்துகளை தயாரித்து பயன்படுத்திக் கொண்டார்கள். இதனல் பல ஆண்டுகள் வாழவும் செய்தார்கள்.
அறியாமை தான் அனைத்து துன்பங்களுக்கும் மூலகாரணம் என்ற விவேகானந்தர் கூற்றுப்படி இம் மூலிகை தாவரங்கள் உங்கள் வீட்டில் இருப்பின் அவற்றை பராமரித்து கொள்ளுங்கள், இல்லை என்றால் இன்றே பயிரிடத் தொடங்குங்கள்.
எம் முனொர்கள் எமக்களித்த இம் மூலிகைகளை பயனுள்ள முறையில் தகுந்தவாறு பயன்படுத்தி நோயின்றி வாழ்ந்து குறயற்ற செல்வத்தை அடந்து நீடுழி வாழ்வோம்.