\இங்கிலாந்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரப்பு குறிப்பிடுகின்றது.
அதிலும் கடந்த இரண்டு ஆணடுகளில் Spiking போன்ற சம்பவங்கள் இங்கிலாந்தில் அதிகரித்திருப்பதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒருவருக்குத் தெரியாமல் அவரது உணவு, பானம் மற்றும் மின் சிகரெட் ஆகியவற்றில் மது அல்லது போதைப்பொருளைச் சேர்க்கும் spiking குற்றமே பெருகியுள்ளது.
இந்த Spiking எனும் செயலை, குற்றச்செயலாக வகைப்படுத்தும் திட்டத்தை இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டாமரின் அலுவலகம் தற்போது உறுதிசெய்துள்ளது.
மேலும், உடலில் ஊசி செலுத்தப்படும் போக்கும் அதிகரித்துள்ளது. அவர் மயக்கம் அடைந்ததும் அவரிடம் தவறாக நடந்துகொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடுகின்றது.
பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான இவ்வாறான வன்முறைச் சம்பவங்களைப் பாதியாகக் குறைக்க பிரதமர் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
அதன்படி, இன்று (25) மாலை பொலிஸார், தொழில்துறை மற்றும் போக்குவரத்துத் துறைத் தலைவர்களை இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டாமர் சந்திக்கவுள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுமிகளை பாதுகாப்பாக வைத்திருக்கக் கூடுதல் ஒத்துழைப்பை நாடுவது இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக உள்ளது.