விண்ணும் மண்ணும்
சரிசமம் என்றால்
எண்ணம் ஏற்காது
கொஞ்சமேனும் காண்.
கடலும் ஆறும்
சமம் என்றால்
அதையும் ஏற்காது
எங்கள் எண்ணம்.
காற்றும் தென்றலும்
சமமாகிப் போகாது.
வாழ்கையில் இதுவும்
பெரும் பாடமாகி போகும்.
விடுதலை வேண்டி
போரிட முடியும்.
விடிவு வந்திட
விரும்பி நாமும்.
முடிவுகள் எங்கள்
போரின் வலிமையில்
விடுதலை எங்கள்
வாழ்வின் வழியில்.
அடக்கி ஆண்டு
விடுதலை வேண்டி
போரிட எமைத்தள்ளி
வாழும் சில மனிதர்.
விடுதலைகாக தம்
உயிரைக் கொடுத்து
மூச்சை நிறுத்தி போகும்
மனிதர் இன்னும் பலர்.
இந்த உலகில்
இது இயற்கை.
வாழ்கை வாழ நாம்
போராடியாக வேண்டும்.
இரைகௌவி பிழைக்க
படைப்பது இருக்கும்.
புரிந்ததை ஏற்று
வாழ்ந்திட வேண்டும்.
கொன்று தின்று
பசியாற்றும் படைப்பில்
தங்கி வாழ்ந்திட
இடம் பிடிக்காதோ?
வாழிடம் வாழ்ந்திட
வாழிடம் பயிரிட
வாழிடம் தொழிலிட
வாழிடம் வீடிட வேண்டும்.
புரிதல் மறந்து
சோரம் போதல்
விடிவிற்கு வழியல்ல
விடுதலை சாகுமோ?
உரிமைகளை மறுத்து
உணர்வுகளை புதைத்து
உயிரோடு எமை பிணமாக
பாவனை செய்தல் கூடுமோ?
இறக்கினும் திமிரோடு
பிறக்கினும் மறுபடி
விடுதலை வீரராய்
வாழ்ந்திட எண்ணுவோம்.
முடிவுகள் எங்கள்
விருப்பில் இருக்க
நெருப்பாய் எரிந்து
இருப்பை உறுதி செய்வோம்.
இந்த உலகில்
நாம் வாழ தகுந்த
நீதிகளே நல்நீதியென
திமிராக பறை சாற்றுவோம்
நம் வலிமை ஒன்றே
நமக்கு தந்திடும்
விடுதலை ஒன்றை
என்றென்றும் காண்.
நதுநசி