7
வாழும் வயதினிலே
நாம் வாழ என்றே
வாழ்வைத் தொலைத்தவரே!
இன்று
சூழும் இருள் தொலைய
தீபமாய் நின்றொளிரும்
தேசக் குழந்தைகளே!
போலி மனிதர்
வேசம் கலைய
நாளை விடியும் நாயகரே!
நின்
நினைவின் வலியால்
நிமிர்ந்திடுவோம்!!
நகுலை குமாரன்