திருமணம் முடித்த கையோடு சீமான், தனது மனைவி கயல் விழியை அழைத்துக் கொண்டு இடிந்தகரை போராட்டக் களத்திற்கு சென்றார்.
திரைப்பட இயக்குனரும், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கும், மறைந்த முன்னாள் தமிழக அமைச்சரும், சட்டமன்ற சபாநாயகருமான காளிமுத்துவின் இளையமகள் கயல் விழிக்கும் கடந்த ஞாயிறு அன்று சென்னையில் திருமணம் நடந்தது.
திருமணம் முடித்த கையோடு சீமான், அவரது மனைவி கயல் விழியை அழைத்துக் கொண்டு இடிந்தகரை போராட்டக் களத்திற்கு சென்றார். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சீமான், மனைவி கயல்விழியுடன் இணைந்து கேக் வெட்டினார்.
பின்னர் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக உதயக்குமார் உள்ளிட்டோருடன் சீமான் பேசினார். திருமணத்திற்கு பிறகு சீமான், மனைவி கயல்விழியுடன் மேற்கொண்ட முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.