செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

ஆரோக்கியம்!

8 minutes read

ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானதாகும். இது உடல்இமனம் இரண்டையும்குறிப்பிடுகிறது. எமது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் போது நாம் மிகவும் மகிழ்ச்சியானவாழ்க்கையை அடையலாம். ஆனால் மனதிலோ அல்லது உடல் நலனிலோ ஏதாவது பாதிப்புகள் இருக்கும்போது எமது வாழ்க்கையை எம்மால் முழுமையானதாக வாழமுடியாது.

வாழ்க்கை என்றால் என்ன ? அதன்நோக்கம் என்ன? நாம் ஏன் பிறக்கின்றோம்?

என்பன போன்ற கேள்விகள் ஒவ்வொரு மனிதருக்குள்ளும்ஏற்படுகின்றன. ஆனாலும் வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் அதனை பொருட்படுத்துவதில்லை. ஒவ்வொருமனிதனும் மனநிறைவான வாழ்க்கையையே தேடுகின்றான்.

ஒவ்வொருவரும் மனநிறைவை தேடுகின்றோம். ஆனால் எல்லோராலும் அதை அடைய முடிவதில்லை. நிம்மதியான வாழ்க்கையை அடைவதற்கு தடையாக இருப்பது என்ன? குடும்ப வாழ்வில் நிம்மதிஇ நல்லஉறவுகள் எல்லாமே ஆரோக்கியத்தில் சேர்கின்றது. ஏனெனில் ஒருவருடைய ஆரோக்கியம் என்பது உடலிலும்மனதிலும் தங்கியிருக்கின்றது.

மனமும் உடலும் ஒன்று சேர்ந்தே இருக்கின்றது. ஆரோக்கியமாக இருப்பது என்பது ஒரு அடிப்படைதேவையாகும். எப்பொழுது உடல் பாதிக்கப்படுகின்றதோ அப்பொழுது மனமும்இ மனம் பாதிக்கப்படும் போதுஉடல்நலனும் பாதிக்கப்படும். ஏனெனில் இவை இரண்டும் சேர்ந்து இயங்கும் போது அவை எமது ஆன்மாவோடுசேர்கின்றது. நாம் எமது ஆன்மாவின் சக்தியிலிருந்து (நநெசபல) விலகும் போது எமது உடல் அல்லது மனஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். எமது உடல் ஒரு வாழும் உயிர். இது பல வாழும் கலங்களால்உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக்கலங்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் மரபணுக்கள் (னுNயு) இருப்பது போலவேஅந்தக்கலங்கள் சேர்ந்து இயங்கக்கூடியதாகவும்இ தனித்து இயங்கக்கூடியதாகவும் இருக்கின்றது. அப்படிசேர்ந்து இயங்கும் போது அவை தங்களுக்குள் ஒரு முழுமையான சமநிலையை பேணவேண்டும். அவைசமநிலை மீறாமல் இருக்கும் போது ஆரோக்கியமாக இருக்கின்றது. எமது மனம் பலவகைகளில் உடலைபாதிக்கின்றது.

எமது உடலின் சுய அறிவு ஆன்மாவின் அறிவோடு சேர்ந்து இயங்குகின்றது. எமது மனதின்போக்குக்கு ஏற்ப உடல் பலவிதமான இரசாயனங்களை உருவாக்குகின்றது. இதற்கேற்ப எமது உடலுக்குநன்மைகளும் தீமைகளும் ஏற்படுகின்றன.

மனதில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களுக்கு காரணிகளாக எமதுஉணர்வுகளும்இ எண்ணங்களும் விளங்குகின்றது. உணர்வுகளும் இஎண்ணங்களும் சேர்ந்தே இயங்குகிறது. முதலில் எண்ணம் உருவாகும் போது எமது மூளையில் சில இரசாயன தாக்கங்கள் ஏற்பட்டு அதன் மூலம் எமதுஉணர்வு உருவாகி நாம் அதை உணர்கின்றோம்.

அதாவது எண்ணங்களின் சக்தியை பொறுத்து அவைஉணர்வுகளை உருவாக்குகின்றதுஇ அந்த உணர்வுகள் எத்தகைய அதிர்வுகளை கொண்டிருக்கின்றதோ அதற்கேற்ப அவ்வுணர்வுகள் எம் உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. மிக தாழ்ந்த மட்டத்திலுள்ள உணர்வுகள் எமது உடலில் பலவகையான எதிர்மறை தாக்கங்களை உருவாக்குகின்றன.

எப்பொழுதும் உடல் சமநிலையை பேணுவதால் அதற்கு உயர்ந்த மட்டத்திலுள்ள உணர்வுகளே தேவை. அன்பு இ மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் நமது உடலில் பலவகையான நல்ல தாக்கங்களை உருவாக்குகின்றன இதனாலேயே நாம் நல்ல உணர்வுகளை உணரும் போது எமது உடலில் நல்லநேர்மறையான தாக்கங்களையும்இ தீயஇ வேண்டத்தகாத உணர்வுகளை உணரும் போது தீய விளைவுகளையும்உடலில் உருவாக்குகின்றோம். ஆக எமது உடல் எமது எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் ஏற்பபாதிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது. எமது ஆன்மாவின் சக்தி அன்பு.

அந்த அன்பின் சக்தியைஉருவாக்கும் உணர்வுகளாக மகிழ்ச்சி கருணை போன்றவற்றை நாம் உணரும் போது அவை நம் உடலில் நல்லநேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் எமது உடல் நலமும்இ மனநலனும் நன்றாக இருக்கும் போது நாம் எமது ஆன்மாவின் உண்மையானசக்தியோடு இயங்கும் மனிதர்களாக விளங்குவோம்.

அப்பொழுது தான் அந்த மனிதன் முழுமையானமனிதனாகிறான். ஆரோக்கியம் என்பது முழுமையானதாக இருக்க வேண்டுமென்றால் எமது ஆன்ம சக்திஉடலோடும் இ மனதோடும் சேர்ந்து இருக்க வேண்டும். அதை எப்படி பெறுவது அதற்கு நாம் செய்யவேண்டியவை என்ன என்பது பற்றி உடல்இ மனம்இ ஆன்மா ஆகிய மூன்று பிரிவுகளின் கீழும் இந்த புத்தகம்விபரிக்கும்.

ஆனாலும் ஒவ்வொருவருக்கும் மனநிறைவை அடைவதற்கு வெவ்வேறு ஆசைகள்இவிருப்பங்கள் இதேவைகள்போன்றன காணப்படும். உதாரணமாக சிலருக்கு நல்ல குடும்ப வாழ்க்கை மூலமும் சிலருக்கு பணத்தின்மூலமும் இப்படியான மன நிம்மதியும்இ சந்தோசமும் ஏற்படுகின்றது ஆரோக்கியமாக இருப்பதால் எமதுஉடல்நலனும் மனநலனும் மேம்படுகின்றன.

இவை எமது கண்ணுக்கு தெரியாதபோதிலும் அவை எமது உடலில் ஏற்படுத்தும் பிரதிபலிப்புக்கள் மூலம்அவற்றை நாம் உணரலாம். ஒவ்வொரு உணர்வும் ஒவ்வொரு அதிர்வையும்இ அதற்கென்று குறிப்பிட்டசக்தி நிலையையும் கொண்டிருக்கின்றது. இந்த சக்திநிலைக்கேற்ப விளைவுகள் உருவாகுகின்றது. இந்த சக்தி நிலை எப்படியிருக்கின்றது என்பதை பொறுத்து அவை எமது உடலிலும் தாக்கங்களைஏற்படுத்துகின்றது. .

எப்படியெனில் ஒரு உணர்வு உருவாகும் போது அது ஒரு ஹார்மோனைஉருவாக்குகின்றது. இது பல ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எதிர்மறையானஉணர்வுகளான பயம் கோபம் பொறாமை என்பன எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகிறது.

உடலும்இ மனமும் சேர்ந்து இயங்குவதால் நாம் இரண்டையும் சேர்ந்து பேணுவதால் மட்டுமே ஆரோக்கியத்தைஅடையமுடியும்.

எண்ணங்களில் இருந்து உணர்வுகள் உருவாகின்றது என்பதை பார்த்தோம். அதே போல்நம்பிக்கைகளில் இருந்தும் உணர்வுகள் உருவாகும். உதாரணமாக நாம் ஒரு விடயம் தொடர்பாகவைத்திருக்கும் பழைய நம்பிக்கைகள் அதனை சற்றி எண்ணங்களை உருவாக்கி அதன்மூலம்உணர்வுகளையும் உருவாக்கும்.

அது போலவே நாம் ஒன்றை விரும்புகின்றோம் அல்லது எதிர்காலத்தில்ஒன்றை அடைய வேண்டும் என்று விரும்புகின்றோம் என்றால் அது தொடர்பான எண்ணங்களை நாங்களாகவேஉருவாக்கி அதன்மூலம் உணர்வுகளை உருவாக்குகின்றோம். இந்த எண்ணங்களையும் அது சார்ந்தஉணர்வுகளையும் உருவாக்கும் தன்மை எமது உடல்நிலையை பாதிக்கின்றது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படையானது எம்மை நாம் உணர்ந்து நாம் யாரென அறிந்து கொள்ளுவதாகும். எமது உடலும்இ மனமும் எமது ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. நாம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை முதலில் அறியவேண்டும்.

அப்படி அறிந்தால் மட்டுமே அதை எப்படி கையாள வேண்டும் என்ற புரிதல் எமக்கு ஏற்படும். நாம் வாழும் இந்த உலகம் ஒரு சக்தி உலகம். எமது உடல் சக்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சக்திகள் பல நிலைகளில் பல மட்டங்களில் இருக்கின்றது.

இவற்றை அறிவதன் மூலம் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை நாம் உருவாக்கிக் கொள்ளலாம். ஒவ்வொருவருக்குள்ளும் ஆண் மற்றும் பெண் தன்மைக்கான சக்திகள் (எனர்ஜி) உள்ளது.
ஒவ்வொருவருக்குள்ளும் அவர்களுடைய சிறுவயது முதலே ஒரு inநெச உhடைன எனும் சக்திவடிவம் உருவாகி வரும்.

இது இந்த உலகிற்கான பரிமாண வடிவமாகவோ அல்லது வேறு பரிமாணமாகவோ காணப்படலாம். இந்த குழந்தை வடிவம் அல்லது எமது ஆண் பெண் சக்திகள் சமமாக இருக்கும் போது நாம் இந்த உலகில் எமக்குத்தேவையான எதையும் உருவாக்கக் கூடியவர்களாக விளங்குவோம்.

பெண்ணுக்குரிய சக்தி பிரபஞ்சத்திலிருந்து படைப்பாற்றலை பெற்று ஆணின் சக்தி மூலம் அதை வெளிக்கொண்டு வருகின்றது. ஐnநெச உhடைன எமது ஆழ்மனதின் ஒரு பகுதியாக கருதலாம். எமது அநுபவங்கள் மூலமாகவோ அல்லது தன்முனைப்பு எனப்படும் ஈகோ மூலமாக இது பாதிக்கப்படுமானால் இது எமக்கு எதிராக இயங்கும் நிலை ஏற்படும். நான் எனது inநெச உhடைன ஐ பலமுறை எனது சிறுவயது முதலே பார்த்திருக்கின்றேன்.

எனது முயற்சிகளில் ஏதாவது தடைகள் வரும்போது எனது inநெச உhடைன உடன் தொடர்பு கொண்டு அதற்கான காரணங்களை கேட்டு அறிவதுண்டு. இந்த சக்திகள் பலவகைகளில் காணப்படுவதால் நாம் எமது உடலை பல வகையில் பிரிக்கலாம்.

அவற்றில் முதலாவதாக பௌதீக உடலைப்பற்றி பார்ப்போம். இந்த உடல் சாதரணமாக எம்மால் பார்த்து உணரக்கூடிய உடலாகும். இது பலவிதமான சக்திகளை உருவாக்கி அவற்றை பயன்படுத்திக்கொள்கின்றது. இந்த உடல் எமது சூக்கும உடலுடன் சேர்ந்து இருக்கின்றது.

எமது சூக்கும உடலானது சக்கரங்கள்இ மெரிடியன் வழித்தடம் போன்ற பல சக்திநிலைகளை கொண்டுள்ளது. எமது உடலின் சக்கரங்கள் பெரியதும் சிறியதுமான அலகுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் மிகச்சிறிய சக்திபுள்ளிகள் இந்த சக்கரங்களில் இருந்து அவற்றை இயக்குகின்றது. இந்த அமைப்பானது எமது வாழ்க்கைக்கான உந்துசக்தியை எடுத்து அதனை எமது உடலின் அன்றாட இயக்கங்களுக்காக வழங்கிக்கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு சக்கரங்களும் ஒவ்வொரு வகையான பிரக்ஞை நிலையில் இருப்பதுடன் தனிப்பட்ட பணியையும் கொண்டிருக்கும். அவற்றின் பணியானது எமது ஆன்மீக வாழ்க்கைக்கும் இந்த உலகில் வாழும் அன்றாட வாழ்க்கைக்கும் அவசியமானது. சக்கரங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் நூலின் ஏனைய பக்கங்களில் விரிவாக தரப்படும்.

ஒலிஇ ஒளி எனக்கூறப்படும் ஓசையும் வெளிச்சமும் எமது ஆன்மாவிற்கு மிக முக்கியமானதாகும். அது போல் இவை எமது சக்கரங்களை பாதிக்கும். அது போலவே எமது உணர்வுகளும் சக்கரங்களை பாதிக்கின்றது. ஒவ்வொரு உணர்வும் அதற்கேற்ப ஒலி அதிர்வு மணம் போன்ற விடயங்களை கொண்டிருக்கும். எமக்கேற்படும் உணர்வுகளின் மூலம் உருவாகும் இரசாயன தாக்கங்களால் நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோமா அல்லது கவலையடைகின்றோமா என்பதை பொறுத்து அந்த உணர்வுகள் நல்லவை அல்லது தீயவை என வகுக்கப்படுகின்றன. இந்த உணர்வுகள் பல மட்டங்களில் தமது அதிர்வுகளை கொண்டிருப்பதால் குறைந்த சக்தியதிர்வுள்ள உணர்வுகள் மூலம் எமது சக்கரங்கள் பாதிக்கப்படும். இதனால் எமது உடலும் பாதிக்கப்படும்.

ஆகவே எமது சக்கரங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் எமது உணர்வுகள்இ எண்ணங்கள்இ நம்பிக்கைகள் என்பவற்றை நாம் அவதானிக்க வேண்டும். அதை எப்படிச்செய்வது என்பதை பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.
அது போலவே எமது உடலுக்கு தேவையானது உணவு. எமது உடலுக்கு சூரியனிலிருந்தும் நட்சத்திரங்களிலிருந்தும் தேவையான சக்தி கிடைக்கின்றது. சூரியனே எமது சக்கரங்களுக்கான பிரதான சக்தி மூலமாக இருந்தாலும் நட்சத்திரங்களும் ஏனைய கிரகங்களும் பல்வேறு பட்ட தாக்கங்களையும் சக்திமாற்றங்களையும் எமது உடலுக்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த தாக்கங்கள் சக்தி வடிவத்திலும் இருக்கும்.

இதையே முன்னோர்கள் சோதிடம் என கூறினார்கள். நாம் உண்ணும் உணவு எவ்வளவு அதிகமான சூரிய ஒளியை கொண்டுள்ளதோ அவ்வளவுக்கு எமது உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கும். உடலானது நிலம் நீர்இ காற்றுஇ ஆகாயம் நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட எமது உடல் பூமியுடன் ஒரு வித காந்த சக்தியுடன் தொடுக்கப்பட்டுள்ளது. உடலில் உள்ள கலங்கள் கூட தனித்தனியாகவும் ஒன்றாக இணைந்தும் இயங்குகின்றன. அதனால் உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் தாக்கம் உடல் முழுவதிலும் பிரதிபலிக்கும்.

ஆகவே ஒருபகுதியில் ஏற்படும் நோய்க்கு நாம் அதை மட்டுமல்லாமல் முழு உடலையும் கவனித்து குணப்படுத்த வேண்டி இருக்கின்றது. ஒரு நோய் உருவாகின்றது என்றால் எமது உடலில் தொடர்ச்சியாக ஏதோ தவறு நடந்திருக்கின்றது என்பதே காரணம். அந்த தவறுகளை சரிசெய்ய வேண்டுமென்றால் நாம் முழுமையான மனித உடலுக்கு மருத்துவம் செய்யவேண்டும்.

இலட்சக்கணக்கான அளவில் உள்ள எமது உடல் கலங்கள் ஒவ்வொன்றும் ஒரு சக்திநிலையின் அடிப்படையில் ஒன்றாக இணைந்துள்ளது. அப்படி இணைந்திருக்கும் கலங்களுக்குள் ஒரு வழிகாட்டும் சக்தி அவற்றை சரியாக இயங்கச் செய்கின்றது. அப்படிப்பட்ட அந்த வழிகாட்டும் சக்தியோடு இணைந்து உடலின் முழுமையை பாதுகாப்பதே பிரதான நோக்கம். அந்த முழுமைத்தன்மையிலிருந்து விலகுவதே புற்றுநோய் கலங்கள் போன்றவை உருவாக காரணம் ஆகின்றது.

இந்த முழுமைத்தன்மையை உடலில் வைத்திருக்க வேண்டுமென்றால் எமது உடலை நாம் உணர வேண்டும். உடலில் பல்வேறு இரசாயன தாக்கங்கள் பல்வேறு காரணிகளால் உருவாகும். உதாரணமாக எமது ஐம்புலன்களின் மூலம் நாம் அடையும் அநுபவங்களுக்கு எமது மூளை பதிலளிக்கும் வகையில் உருவாக்கும் இரசாயனங்கள் மூலம் உடலில் பல தாக்கங்கள் ஏற்படும். ஒருவர் எமக்கொரு செய்தியை சொல்லும் பொழுது அது நல்ல விடயமாக இருக்கும் பட்சத்தில் நல்லுணர்வு ஏற்பட்டு மூளை அதற்கான நேர்மறையான இரசாயனங்களை உருவாக்கும்.

அதுவே தீய செய்தியாக இருந்தால் கவலை பயம் போன்ற தீய உணர்வுகள் உருவாகி மூளை எதிர்மறையான இரசாயனங்களை உருவாக்கும். இந்த சந்தர்ப்பத்தில் எமது மூளை உருவாக்கும் இந்த இரசாயன மாற்றங்களை பற்றிய தகவல்களை கொண்டு எமது உடலும் அதற்கேற்ப சுரப்பிகளை சுரக்கும். அந்த சுரப்புகள் எமது உடலை பாதிக்கும். நாம் எம்மை நல்ல விதத்தில் உணர்வோமானால் நல்ல சுரப்புகள் உற்பத்தியாகின்றன. எதிர்மறையாக உணரும் போது கோர்டிசோல் போன்ற தீமைதரும் சுரப்புகள் உற்பத்தியாகின்றன.

இந்தச்செயற்பாடு எமது உடலில் எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கும். எமது எண்ணங்களின் அலைச்சுழலையும் உணர்வுகளையும் சரியான முறையில் பேணும் பொழுது இந்த தீய சுரப்புக்களை நாம் உருவாக்காமல் தவிர்க்கலாம். சுரப்புக்கள் எமது உடலின் தேவைக்காகவே உருவாக்கப்படுகின்றன. ஒருசில சுரப்பிகள் ஆண் மற்றும் பெண்ணின் உடல் அமைப்பிற்காக மாறுபட்டிருந்தாலும் மற்ற அனைத்து சுரப்பிகளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவையாகும்.

எமது உடல் முழுமையாகவே எந்த உணர்வும் அற்றது. ஆனால் நாம் உருவாக்கும் எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கேற்ப எமது உடல் அமைகின்றது. நாம் எமது உடலைப்பற்றி மதிப்பீடு செய்யும் பொழுது அல்லது எமது உடலை மற்றொருவருடன் ஒப்பிடும் போது எமது உடல் பாதிக்கப்படுகின்றது. நாம் எம்மை அறியாமலே அப்பொழுது பல உணர்வுகளை உருவாக்குவோம். அப்படி நாம் உருவாக்கும் இந்த உணர்வுகள் எம்மை மட்டுமன்றி நாம் வாழும் சமூகத்தையும் பாதிக்கின்றது.

நாம் உணரும் ஒரு உணர்வானது குறிப்பிட்ட அளவு அதிர்வுடன் வெளியே செல்லும். வெளியே சென்ற அந்த உணர்வு அதே அதிர்வுகளை கொண்ட உணர்வுகள்இ நபர்கள்இ சந்தர்ப்பங்கள் என்பவற்றுடன் தானாகவே இணைந்து அவற்றை நோக்கி எம்மை ஈர்க்கும். அல்லது அவற்றை எம்மை நோக்கி கொண்டுவரும். ஆகவே நாம் குறைவான தீய உணர்வுகளை கொண்டிருந்தால் அதன்மூலம் நாம் குறைந்தளவான சக்தியதிர்வுகளையே வெளிவிடுவோம்.

அவை வெளியில் சென்று அதே போன்ற அலைசுழலுடன் சேர்ந்து மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். ஏனென்றால் எமக்கு இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு சக்தியுடல் தனியாக இருக்கின்றது. அதைவிடவும் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிர்களையும் இணைத்தவாறு ஒரு கூட்டு சக்தி உடல்இருக்கின்றது. ஆகவே எமது நல்லதோ அல்லது தீயதோ எப்படிப்பட்ட உணர்வுகளும் அதிர்வுகளாக வெளியே சென்று அந்த பிரபஞ்ச கூட்டு உடலில் அந்த உணர்வுகளுக்கேற்ப நல்ல அல்லது தீய விதமாக பாதிக்கும்.

இப்பொழுது ஐம்பூதங்களில் ஒன்றான காற்றை பற்றி பார்த்தோமானால்இ காற்றை நாம் சுவாசிக்கும் போதுஅதை ஒட்சிசனை உள்ளே எடுக்கின்றோம். காபனீரொட்சைட்டை வெளிவிடுகின்றோம். இது இயல்பாகதானாகவே நடைபெறும் ஒரு செயற்பாடாகும். சுவாசத்தின் போது நாம் ஒட்சிசனை மட்டும் பெறுவதில்லை. பிராண சக்தியையும் எடுக்கின்றோம். அதனால்தான் ஆழ்ந்தஇ அமைதியான சுவாசம் அவசியமாகின்றது. ஏனென்றால் எமது உடலில் இருவகையான நரம்பு மண்டலங்கள் உள்ளன.

ஒன்று தானாகஇயங்கக்கூடியதாகவும் மற்றையது எமது விருப்பத்துடன் இயக்கக் கூடியதாகவும் உள்ளது. அப்படி தானாகஎமது விருப்பமின்றி இயங்கும் நரம்புமண்டலம் மூளையின் நடுப்பகுதியில் உள்ள பீனியல்சுரப்பியின் மூலம் இயக்கப்படுகின்றது. இந்தச் சுரப்பி எமது நெற்றிக்கண் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது.

எமது விருப்பத்தால் இயங்கும் நரம்பு மண்டலம் அது எமது தேவைக்கேற்ப இயங்குகின்றன. ஆகவே ஆழ்ந்தமூச்சின் மூலம் இத்தகைய நரம்பு மண்டலங்களுக்கு தேவையான பிராண சக்தி கிடைக்கின்றது. அதனுடன்சேர்ந்து எமது மூளையிலும் நல்ல அதிர்வுகள் உருவாகும். ஆழ்ந்த மூச்சின் போது எமது மூளை ஆல்பாநிலைக்கு வந்துவிடும்.

அது எமது மூளையின் முன் பகுதியிலேயே இயங்கும். அது போல் பீட்டா நிலை என்பதுநாம் சாதாரணமாக எப்பொழுதும் இருக்கும் நிலையாகும். இந்த நிலையில் அவை மூளையின் பின் பகுதியில்இயங்கும். நாம் மிக ஆழமான அமைதியடைந்து எமது எண்ணங்கள்இ உணர்வுகள் எதுவும் அற்று இருப்பதுடெல்டா ஆகும். இவை எமது விருப்பத்திற்கேற்றவாறு எமது எண்ணங்களை நம்பிக்கைகளை மாற்றும் போதுஏற்படுத்தக்கூடியது. நாம் எம்மை எப்படி உணர்கின்றோமோ அதற்கேற்பவே இந்த ஆல்பா பீட்டா டெல்டாபோன்ற மூளைக்கதிர்கள் உருவாகும். கற்பனையில் நாம் ஒரு வகையான அச்ச உணர்வைகொண்டிருந்தோமானால் கூட உடல் அதை உண்மை என்றே நம்பும்.

நீங்கள் உங்கள் மனதில் கற்பனையாகநினைத்தாலோ அல்லது எதிர்காலத்தை பற்றி நினைத்து பயந்தாலோ உடல் அதை உண்மை என்றேஎடுத்துக்கொள்ளும். அதற்கு ஒவ்வொன்றுமே அந்தக்கணத்தில் நடப்பதுதான். எதிர்காலம்இ இறந்தகாலம்என்பன உடலிற்கு இல்லை. கற்பனையில் நாம் ஒன்றை பார்க்கும் போது அதை நாம் எமது வாழ்வில்உண்மையாக அடையலாம்.

ஏனெனில் நாம் கற்பனை பண்ணும் பொழுது அந்த விடயத்திற்கு ஒரு சக்தியைகொடுக்கின்றோம். அப்படி சக்தி கொடுக்கும் போது எமது ஆன்மாவும் அதை உண்மையாக விரும்பினால் அதுஎமது வாழ்க்கையில் வந்துவிடும். உதாரணமாக நீங்கள் ஒரு கார் வாங்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். காரணம் உங்கள் அயலவர் ஒருவர் விலையுயர்ந்த கார் வைத்திருக்கின்றார் அதனால் நீங்களும் அவருக்குபோட்டியாக அதை வாங்க நினைக்கின்றீர்கள் என வைத்துக் கொள்வோம்.

இது ஒரு தன்னகங்காரத்தின்அடிப்படையிலான விருப்பம். சில வேளைகளில் அந்த விருப்பம் நிறைவேறலாம். ஆனாலும் நீங்கள் அந்தகாரை உளப்பூர்வமாக விரும்பி கேட்டீர்களென்றால் உங்கள் உடலும் அந்த உணர்வை உணரும். அதனால் அந்தவிருப்பம் ஒரு அதிர்வுடனும்இ சக்தியுடனும் வெளியே செல்லும். அப்படிப்பட்ட இதயபூர்வமான விருப்பம்நிறைவேறுவதற்கு நிறைய வழிவகைகள் பிறக்கும். நாம் எதை விரும்புகிறோமோ எதை எண்ணுகின்றோமோஅதை எமது உடல் பிரதிபலிக்கும். எதற்காகவோ பயப்படுதல் அல்லது இல்லாத ஒன்றிற்கு கவலைப்படுதல்போன்றவற்றை எமது உடல் அவ்வாறே உணரும்.

அவை எமது வாழ்வில் உண்மையாக உருவாகியும் விடும். நல்ல உணர்வுகள் உயர்ந்த சக்தியதிர்வுகளை கொண்டுள்ளன. ஒவ்வொரு உணர்வுகளும் எண்ணங்களும்ஒவ்வொரு வகையான சக்தியை கொண்டுள்ளன. அதற்கேற்ப அதிர்வுகளையும் அவை உருவாக்கும். உயர்ந்தஅதிர்வுகளை நாம் கொண்டிருந்தால் எமது படைப்பாற்றல் சக்தி அதிகரிக்கும். எமக்கு தேவையானவாழ்க்கையை நாம் உருவாக்கலாம்.

 

நன்றி : ஞானா உருத்திரன் | அலைகள் இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More