தமிழாய்வு மைய வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா கடந்த சனிக்கிழமை அன்று லண்டனில் உள்ள Alperton Community School அரங்கத்தில் இடம்பெற்றது.
மாலை 6.00 மணியளவில் ஈகைச்சுடருடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வை சிரேஸ்ட ஊடகவியலாளர் திரு. பிறேம் அவர்கள் தலைமையேற்று நடாத்திச் சென்றார்.
இந்நிகழ்வில் மாவீரர் திருவுருவப் படத்திற்கான அஞ்சலியை விடுதலை போராட்ட முன்னோடி திரு. சத்தியசீலன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
மலர்வணக்கத்தை தொடர்ந்து வரவேற்புரையினை செல்வி யபர்ணா அவர்கள் நிகழ்த்தினார். பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுக உரையினை தமிழாய்வு மையத்தின் இயக்குனர்களில் ஒருவரும் ஆய்வாளருமான திரு.தி.திபாகரன் நிகழ்த்தினார்.
சிறப்புரைகளை திருமதி கெனிப்பரா, திரு.சிவராதன், திருமதி.வேணி சதீஸ், திரு.பாலகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து வெளியீட்டு உரையினை நூலகவியலாளர் என்.செல்வராஜா நிகழ்த்தி, நூலை வெளியிட சிறப்புப் பிரதியை வைத்தியக் கலாநிதி போராளி, வாமன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
விமர்சன உரைகளை திரு.சேனா முத்தையா, திரு சிறீதரன், பேராசிரியர் புவனேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தினர். எற்புரையினை நூலாசிரியர் அரசறிவியலாளர் மு திருநாவுக்கரசு அவர்கள் இணைய காணொளி மூலம் நிகழ்த்தியதோடு, சபையோர் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளித்தார். இறுதியாக மையத்தின் சார்பில் ஊடகவியலாளர் அ.மயூரன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இரவு 10.30 மணியளவில் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.