மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவின் துணை ஜனாதிபதி ரொசாரியோ முரில்லோவிற்கு எதிராக, அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. ஜனாதிபதி டேனியல் ஒர்டேகாவின் மனைவியாகிய ரொசாரியோ முரில்லோ மீதான ஊழல் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோத கொலைகள், ஆட்கடத்தல் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இளையோர் அமைப்பு ஒன்றிற்கு அவர் தலைமை தாங்கியதாக நம்பப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேநேரம், நிகரகுவா ஜனாதிபதி ஆலோசகருக்கு எதிராகவும் இந்தத் தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.