செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இந்தியன்-2 தான் என்னுடைய திரையுலக பயணத்தின் கடைசிப் படம்

இந்தியன்-2 தான் என்னுடைய திரையுலக பயணத்தின் கடைசிப் படம்

1 minutes read

இந்தியன்-2 படம் தான் தனது திரையுலகப் பயணத்தின் கடைசிப் படமாக இருக்கும் என்றும் அதன் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதற்காகவும் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு மரணம் அடைந்ததைத் தொடர்ந்து உருவான வெற்றிடத்தை நிரப்பும் வகையில், தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபடப் போவதாக கமல்ஹாசன் கடந்த ஆண்டு அறிவித்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி மதுரையில் அவர் “மக்கள் நீதி மய்யம்” எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அன்றே அவர் தனது கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். 6 தென்மாநிலங்களைக் குறிக்கும் வகையில் 6 கைகள் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்த காட்சியுடன் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில், தற்போது நான் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றேன். இந்தப் படம் தான் எனது உலகப் பயணத்தில் கடைசிப் படமாக இருக்கும். இந்தியன் 2 படத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விடைபெற்று விடுவேன்.

நடிப்பில் இருந்து நான் ஒதுங்கி விட்டாலும் எனது திரைப்பட நிறுவனம் தொடர்ந்து செயற்படும் எங்களது கட்சியை வழி நடத்த நிதி தேவைப்படுவதால் அதற்கு உதவும் வகையில் எனது திரைப்பட நிறுவனம் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கும்.

இந்தியன்-2 படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிந்ததும் எனது அரசியல் பணி முழு நேரமாக மாறும். பாராளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என கமல் தெரிவித்துள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More