இந்தோனேசியாவின் அனாக் க்ரக்டோவா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் குறைந்தது 429 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரழிவு தடுப்பு முகமை தெரிவித்துள்ளது.
மேலும் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். என அம்முகமை கூறுகிறது. சனிக்கிழமை முதல் நடைபெற்ற இயற்கை பேரிடர் சம்பவங்களில் 1459 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 150 பேரை காணவில்லை.
என்று இந்தோனேசிய பேரழிவு தடுப்பு முகமையின் பேச்சாளர் சுடோபோ புர்வோ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அனாக் க்ரகடோவா தீவில் எரிமலை வெடித்தால், அது ஒரு புதிய சுனாமியை உருவாக்கக்கூடும் என்று அப்பகுதிக்கு அருகில் உள்ள கடலோர மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
எங்கும் இடிபாடுகள் சிதறிக்கிடக்கின்றன. இடிந்த கார்கள், நெருங்கிய மோட்டார் சைக்கிள், கட்டட இடிபாடுகளையே எல்லா இல்லங்களிலும் காண முடிகிறது. என செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கார்கள் மற்றும் கண்டெய்னர்கள் 10 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.