செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ரீயூனியன் தீவிற்கு சென்றோரை அழைத்து வர நடவடிக்கை

ரீயூனியன் தீவிற்கு சென்றோரை அழைத்து வர நடவடிக்கை

1 minutes read

சட்டவிரோதமாக ரீயூனியன் தீவிற்கு சென்ற நிலையில், அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 70 போரையும் நாளைய தினம் விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்தது.

பிரான்ஸ் அதிகாரிகளின் பாதுகாப்புடன் இவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 09 ஆம் திகதி நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற படகொன்று காணாமல் போயுள்ளதாக படகின் உரிமையாளர் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

வே-பிரஷங்கா எனப்படும் நீண்ட நாள் மீன்பிடி படகொன்றே காணாமல் போயிருந்தது. அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் படகோட்டியாக செயற்பட்ட நபர், குறித்த 70 பேரிடமும் ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபா வரை அறவிட்டு பிரான்ஸின் ரீயூனியன் தீவு வரை அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இம்மாதம் 05 ஆம் திகதி படகிலிருந்தவர்கள் ரீயூனியன் தீவைச் சென்றடைந்தனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, புத்தளம், அம்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 70 பேர் மடகஸ்காருக்கு 175 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ரீயூனியன் தீவிற்கு சென்றுள்ளமை விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு சென்றுள்ளவர்களுள் 5 சிறு பிள்ளைகளும், 8 பெண்களும் அடங்குவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்தது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More